தமிழில் வாமனன் படத்தில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அந்தப்படம் சரியாக போகாததால் அப்போது யாரும் அவரை சரியாக கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என மாறிமாறி நடித்த அவர்மீது, ஸ்ரீதேவியுடன் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் ஒரு வெளிச்சம்போட்டுக் காட்ட, அதன்பின் சிலமாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வெளியான ‘எதிர்நீச்சல்’ படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து தற்போது சிவாவுடன் நடித்துள்ள ‘வணக்கம் சென்னை’ படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இதுதவிர கௌதம் கார்த்திக்குடன் ‘வை ராஜா வை’, விக்ரம் பிரபுவுடன் ‘அரிமா நம்பி’ மற்றும் அதர்வாவுடன் ‘இரும்புக்குதிரை’ ஆகிய படங்களில் நடித்துவரும் பிரியா ஆன்ந்த்தின் கேரியர் க்ராஃப் சீராகவே உள்ளது. இன்று பிறந்தநாள் காணும் ப்ரியா ஆனந்த்திற்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.