சினிமா என்கிற கனவுத்தொழிற்சாலையில் பெண்களுக்கு கதாநாயகியாக, கவர்ச்சிப் பெண்களாக, துணை நடிகைகளாக, பாடகிகளாக, எப்போதுமே முன்னுரிமை உண்டு… மற்றபடி சினிமா என்கிற பிரமாண்டத்தை உருவாக்கும் தொழில் நுட்பத்தில் பங்கு செலுத்தும் பெண்கள் மிக மிகக் குறைவுதான்.
ஆனால் திரைப்படத் துறையில் பெண்களால் உச்சத்தைத் தொட முடியும் என்கிற நம்பிக்கைக்கு ஆதாரமாக சில பெண் இயக்குனர்கள் அவ்வப்போது தங்கள் படைப்பின்மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்தான் ‘திருதிரு துறுதுறு’ படத்தின் இயக்குனர் ஜே.எஸ்.நந்தினி.
முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு படத்தைக் கொடுத்து முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நந்தினி, இப்போது ‘கொலை நோக்கு பார்வை’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இன்று பிறந்தநாள் காணும் நந்தினிக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.