பாரிஜாதம் படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக்கண்டேனே முதல் முறை’ பாடலை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்தப்பாடலில் தன் இசையால் விளையாடி இருப்பார் இசையமைப்பாளர் தரண்குமார். பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படம் மூலமாக தமிழ்சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த தரண்குமார், மீண்டும் அவரது மகன் சாந்தனு நடித்த சித்து பிளஸ் டூ படத்திற்கும் இசையமைத்தார்.
தொடர்ந்து தம்பிக்கு இந்த ஊரு, போடாபோடி படங்களுக்கு இசையமைத்த தரண்குமார், விஷால் நடித்த சமர் படத்திற்கும் பின்னணி இசை அமைத்தார். தற்போது என்றென்றும், விரட்டு ஆகிய படங்களுக்கு இசையமைத்து வரும் தரண்குமார் சிபிராஜ் நடிக்கும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்திற்கும் இசையமைக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் தரண்குமாருக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.