ஹேப்பி பர்த்டே ட்டூ சி.வி.குமார்..!

191

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள்தான் எப்போதும் ட்ரெண்ட் செட்டர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போது வேகமாக வளர்ந்து வரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துவரும் சி.வி.குமார், இந்த ட்ரெண்டையே அடியோடு மாற்றியுள்ளார்.

அட்டகத்தியில் ஆரம்பித்து, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி என தொடர் வெற்றிப்படங்களால் சி.வி.குமாருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது மறுக்கமுடியாத உண்மை. குறிப்பாக, குறும்பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையே தனது லட்சியமாக வைத்துள்ள சி.வி.குமார், முதல் படம் வெளியானபோது இருந்து தன்மீது உருவான எதிர்பார்ப்பை இன்றுவரை மிகச்சரியான முறையில் பூர்த்தி செய்து வருகிறார்

தமிழ்சினிமாவில் படத்தயாரிப்பின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு புதிய பாதையை திறந்துவிட்டுள்ள சி.வி.குமாருக்கு இன்று பிறந்தநாள். அவர் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க நமது Behind Frames வாழ்த்துவதோடு, அவருக்கு தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.