பிரம்மானந்தம்..காமெடியில் எத்தனை வெரைட்டி காட்டமுடியும் என்பதை டோலிவுட் ரசிகர்கள் அறிந்துகொண்டது இவர் படம் மூலம் தான்.. தெலுங்கு சினிமாவின் கவுண்டமணி என்று இவரைச் சொன்னால் நம் கவுண்டமணியேகூட அதற்கு முதல் ஆளாக ‘லைக்’ போடுவார்.
ஒரு படத்தில் இவர் நடிக்கிறார் என்றால் அந்தப்படத்தின் வியாபாரமே வேறு. நம்மவர்களுக்கு ‘மொழி’ படம் மூலமாக நன்கு நெருக்கமானவர். பின்னர்தான், ‘அட.. கில்லியில் விஜய் வீட்டில் யாகம் வளர்த்து விஜய்யை டார்ச்சர் செய்வாரே. அவர்தானா இது’ என ஆச்சர்யப்பட்டவர்கள் பலர். ராதாமோகன் படங்களில் கதைக்கு அடுத்ததாக தவறாமல் இடம்பிடிப்பவர்.
இன்று பிறந்தநாள் காணும் பிரம்மானந்த்த்திற்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.