இந்திய சினிமாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் யாரென கேட்டால் ஒட்டுமொத்த திரையுலகமும் இயக்குனர் கைகாட்டுவது இயக்குனர் கே.பாக்யராஜை நோக்கித்தான். திரைக்கதை எழுதுவதில் பாக்யராஜுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் சினிமா வரலாற்றில் தொடர்ந்து 11வெற்றிப் படங்களைத் தந்த ஒரே இயக்குநர், ஹீரோ என்ற பெருமையும் பாக்யராஜுக்கே உண்டு. அவரது பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றன.
தன்னம்பிக்கையும், திறமையும் இருந்தால் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்ல, நடிகராகவும் ஜெயிக்கலாம் என்று தனக்குப்பின் வந்தவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக வழி காட்டியவர் என்று சொன்னாலும் அது மிகையாகாது. இன்று பிறந்த நாள் காணும் தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.