உண்மையிலேயே இது மிகப்பெரிய வளர்ச்சிதான். 2004ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலமாக தமிழ்சினிமாவில் நுழைந்த ஆர்யா இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது. காமெடி, ஆக்ஷன் என எல்லா ஏரியாவுக்கும் பொருந்துகின்ற ஆர்யாவுக்கு சமீபத்தில் ரிலீஸான ராஜா ராணி, ஆரம்பம் என வரிசையாக ஏறுமுகம் தான்.
முன்னணி இயக்குனர்களும் நடிகைகளும் தங்கள் படத்தில் ஆர்யா தான் ஹீரோ என்றால் உடனே டிக் அடிக்கின்றனர். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் ஈகோ பார்க்காமல் ஒத்துக்கொள்வது ஆர்யாவின் ஸ்பெஷாலிட்டி. இன்று பிறந்தநாள் காணும் ஆர்யாவுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.