ஹேப்பி பர்த்டே ஆர்யா…!

235

 

உண்மையிலேயே இது மிகப்பெரிய வளர்ச்சிதான். 2004ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலமாக தமிழ்சினிமாவில் நுழைந்த ஆர்யா இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது. காமெடி, ஆக்‌ஷன் என எல்லா ஏரியாவுக்கும்  பொருந்துகின்ற  ஆர்யாவுக்கு தற்போது ஏறுமுகம் தான்.

முன்னணி இயக்குனர்களும் நடிகைகளும் தங்கள் படத்தில் ஆர்யா தான் ஹீரோ என்றால் உடனே டிக் அடிக்கின்றனர். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் ஈகோ பார்க்காமல் ஒத்துக்கொள்வது ஆர்யாவின் ஸ்பெஷாலிட்டி. அதுமட்டுமல்ல இன்று தமிழ்சினிமாவில் அதிக அளவு கெஸ்ட் ரோலில் நடித்து வருபவரும் ஆர்யா தான்.

இந்த வருடம் ஆர்யா கதாநாயகனாக நடித்து படம் எதுவும் ரிலீஸாகவில்லை என்றாலும் கெஸ்ட் ரோலில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மற்றும் ‘ஜீவா’ ஆகிய படங்களிள் நடித்திருந்தார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீகாமன்’ இந்த மாதம் வெளியாக இருக்கிறது.

இன்று பிறந்தநாள் காணும் ஆர்யாவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

Comments are closed.