
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப்படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அது வெளிவருவதற்குள்ளாகவே ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார் ஜீ.வி.பிரகாஷ்.
இந்தப்பட்த்தில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.. காலூரியில் படிக்கும் ஜீ.வி இதற்காக எம்.ஜி.ஆர் படம் போட்ட டீசர்ட்டுகளாக அணிந்து கலக்குகிறாராம். இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகிகள்.. ஒருவர் தற்போது பிரபு சாலமன் இயக்கும் ‘கயல்’ படத்தில் நடித்துள்ள ஆனந்தி. இன்னும் முதல் படம் வெளியாகாத நிலையில் இந்த வாய்ப்பை கைப்பற்றியுள்ளார்.
இன்னொரு கதாநாயகியாக புதுமுகம் ஸ்ருஷ்டி. ரிபெல் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்தை ஆதிக் என்பவர் இயக்குகிறார். அப்ப மியூசிக்.. அதுவும் ஜீ.வி.பிரகாஷே தான். அடுத்த வாரத்தில் படப்பிடிப்பை துவங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
Comments are closed.