“கெஸ்ட் ரோல் மாதிரி இருந்தா நல்லாருக்கும்” – கமலுக்கு ஒகே சொன்ன அமலா..!

235

amala- kamal

அது இருக்கும்… கமல்-அமலா என்கிற சூப்பர்ஹிட் ஜோடியின் நடிப்பில் வெளியான ‘வெற்றிவிழா’ படம் வெளியாகி ஒரு 27 வருஷம் போல இருக்கும்.. சத்யா, பேசும் படம், வெற்றிவிழா என மூன்று படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் முதலிடம் பிடித்த இந்த ஜோடி பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணைய இருக்கிறார்கள் என்பது தான் இப்போது ஹாட் டாபிக்.

மலையாள இயக்குனரான டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க அமலாவுக்கு அழைப்பு விடுத்தார் கமல்.. பள்ளிக்கூடம் நடத்துவது, பிராணிகள் நல அமைப்புக்காக அலைவது என பிஸியாக இருக்கும் அமலாவுக்கு கமலின் வாய்ப்பையும் தட்ட முடியாத நிலை..

அதனால் “கெஸ்ட் ரோல் மாதிரி இருந்தா நல்லாருக்கும்” என கமலிடம் கோரிக்கை வைக்க, அந்த ரோலுக்குத்தான் நானும் உங்களை அழைத்தேன்” என கமலும் கூற அமலா சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டுள்ளாராம். இந்தப்படத்தை இயக்கும் ராஜீவ்குமார் கூட 27 வருடங்களுக்கு முன் கமலை வைத்து மலையாளத்தில் ‘சாணக்யன்’ என்கிற படத்தை இயக்கியவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.