‘கோலி சோடா’ படம் ரிலீஸானதும் போதும்.. தினசரி ஒரு பிரபலம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுப் பத்திரம் வாசித்து விடுகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. படம் நன்றாக இருக்கிறது. அதனால் தானாக மனமுவந்து உண்மையை சொல்கிறார்கள். சமீபத்தில் தான் சமந்தா இந்தப்படத்தை பார்த்துவிட்டு படம் பிரமாதம் என பாராட்டியிருந்தார்.
தற்போது அந்தப்பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் அனுஷ்கா. படத்தை பார்த்துவிட்டு “சின்ன டீம்.. சின்ன பசங்க.. ஆனா என்ன அற்புதமா படத்தை எடுத்துட்டு போயிருக்காங்க..” என தனது திரையுலக நணபர்களிடம் தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார். பிரபலங்களின் வாய்மொழியினாலேயே ‘கோலி சோடா’ பிரபலமாகி வருவதை கவனித்தீர்களா.?
447608 116262Thanks so significantly for one more post. I be able to get that kind of details details. friend, and exactly. 177573