ஆஸ்காருக்குள் நுழையும் கீது மோகன்தாஸ் படம்..!

90

 

‘என் பொம்முக்குட்டி அம்மா’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகவும் உயர்ந்தவர் மலையாள நடிகை கீது மோகன்தாஸ். மாதவனுடன் ‘நள தமயந்தி’ படத்தில் ஜோடியாக நடித்தாரே அவரே தான்.

இவர் ஒரு இயக்குனராகவும் மாறி ‘லையர்ஸ் டையஸ்’ என்ற படத்தை இந்தியில் இயக்கியிருந்தார். இமயமலை அடிவாரத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு தாய் தனது வளர்ப்பு மகளுடனும் ஒரு செல்ல ஆட்டுக்குட்டியுடனும் காணாமல் போன தனது கணவனை தேடி புறப்படுவது தான் இந்தப்படத்தின் கதை.

இந்தப்படத்தில் நடித்ததற்காக கீதாஞ்சலி தப்பா என்கிற நடிகை கதாநாயகி சிறந்த நடிகைக்கான தேசியவிருதையும் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரும் கீது மோகன்தாஸின் கணவருமான ராஜீவ் ரவிக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது இந்தப்படத்திற்கான தனிச்சிறப்பு.

தற்போது இந்தப்படம் அடுத்து நடைபெறவிருக்கும் 87வது ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் போட்டியிட உள்ளே நுழைந்திருக்கிறது. இந்தப்படத்துடன் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘குயீன்’ படம் மற்றும் மராத்திய படம் ஒன்று கலந்துகொள்கின்றன.

Comments are closed.