ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ‘குயீன்’..!

295

Paris Paris Movie Launch

கடந்த 2014ல் இந்தியில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸை அடித்து நொறுக்கிய படம் தான் குயீன் (queen). அனுராக் காஷ்யப் தயாரித்த இந்தப்படத்தில் கங்கனா ரணவத் கதாநாயகியாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட பனிரெண்டரை கோடியில் தயாராகிய இந்தப்படம் 97கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற பலத்த போட்டி நிலவி வந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அந்த விஷயம் அப்படியே சைலன்ட் ஆனது..

இந்தநிலையில் தான் இந்தப்படத்தின் தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்க, கதாநாயகியாக அதாவது ‘குயீன்’ ஆக நடிக்கிறார் காஜல் அகர்வால்.. இந்தப்படத்திற்கு ‘பாரிஸ் பாரிஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக சசி வருண் என்பவர் இதில் அறிமுகமாகிறார்.

இதை இந்த படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரமேஷ் அரவிந்த், காஜல் அகர்வால், இந்தப்படத்திற்கு வசனம் எழுதும் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு இந்த செய்தியை வெளியிட்டனர்.

தமிழில் உள்ள ரசிகர்கள் இந்த கத்தியுடன் ஒன்ற வேண்டும் என்பதற்காக விருதுநகர் பின்னணியில் இதன் கதைக்களத்தை அமைத்து அங்கிருந்து அப்படியே வெளிநாடுகளுக்கு கதையை தூக்கி செல்கிறார் ரமேஷ் அரவிந்த். இந்தப்படம் இந்தியில் பெற்ற வெற்றிக்கு நிகராக தமிழிலும் வெற்றிபெறும் என உறுதியாக கூறுகிறார் ரமேஷ் அரவிந்த். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், இப்போதுதான் புதிதாக படத்தில் நடிக்கப்போவதுபோல தான் உணர்வதாக கூறினார் காஜல் அகர்வால்.

Comments are closed.