சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவராலும் கவனிக்கப்படுவது என்பது வரம் கிடைப்பது மாதிரி. அதனாலேயே அது எல்லோருக்கும் எளிதாக கிடைத்து விடுவதும் இல்லை. ஆனால் தந்தை கார்த்திக்கிற்கு அலைகள் ஓய்வதில்லை படத்தில் கிடைத்த வரவேற்பை விட கடல் படத்தில் நடித்த அவரது மகன் கௌதம் கார்த்திக் கொஞ்சம் அதிகமாகவே எல்லோரையும் கவர்ந்திருக்கிறார்.
மோதிரக்கையால் குட்டுப்பட்ட மாதிரி மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான கௌதம் இப்போது சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை என மூன்று படங்களில் நடித்துவருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் கௌதமை தாத்தா முத்துராமனின் ஆசிர்வாதமும் தந்தை கார்த்திக்கின் வழிகாட்டுதலும் வெற்றிப்பாதையிலே அழைத்துச் செல்லும் என்பது உறுதி. கௌதமிற்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.