கணேஷ் வெங்கட்ராமின் த்ரில்லிங்கான ‘அச்சாரம்’

88

கடந்த வருடம் தான் நடித்த ‘தீயா ஏலை செய்யணும் குமாரு’ மற்றும் ‘இவன் வேற மாதிரி’ என இரண்டு படங்களிலும் நடித்த கணேஷ் வெங்கட்ராமுக்கு அந்தப்படங்களின் வெற்றி உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த உற்சாகத்தில் தற்போது சோலோ ஹீரோவாக ‘அச்சாரம்’ என்ற படத்தில் நடிக்கிறார் கணேஷ்.

‘அபியும் நானும்’ படத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்தபோதே அதில் ராதாமோகனிடம் இணை இயக்குனராக வேலை பார்த்த மோகன் கிருஷ்ணா, தான் இயக்கும் முதல் படத்தில் இவரைத்தான் ஹீரோவாக நடிக்க வைக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.

அதற்கேற்ற மாதிரி படு த்ரில்லிங்கான கதையை தயார் செய்து அதற்கு ‘அச்சாரம்’ என பெயர் வைத்து படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார். இதுதவிர ‘பொல்லாதவன்’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் கணேஷ் வெங்கட்ராம்.

Leave A Reply

Your email address will not be published.