‘கோணக்கொண்டக்காரி’ என ஜீ.வி.பிரகாஷ் தனியாக பாடினாலும், இல்லை தனது காதல் மனைவி சைந்தவியுடன் இணைந்து ‘யாரோ இவன்’, ‘யார் இந்த சாலையோரம்’ என டூயட் பாடினாலும் அது ஹிட் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
திரு இயக்கத்தில் விஷால் நடித்துவரும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஒன் பிளஸ் ஒன் ஆஃபராக, ’ஏலேலோ’ என்ற பாடலை தனியாகவும், ‘இதயம் உன்னை தேடுதே பாடலை சைந்தவியுடன் சேர்ந்தும் பாடியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். படத்தில் தீம் சாங்கோடு சேர்த்து மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆடியோ ரிலீஸ் எப்போது என விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.