நினைத்தார் ஜி.வி.பிரகாஷ்.. சாதித்தார் ஜெய்..!

239

 

‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என ஜி.வி.பிரகாஷ் தனது படத்திற்கு வைத்த டைட்டில், அவரைவிட நடிகர் ஜெய்க்குத்தான் சரியாக மேட்ச் ஆகியிருக்கிறது.. இன்றைய இளம் ஹீரோக்களில் பலருக்கும் நயன்தாரா மற்றும் த்ரிஷாவுடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.

ஆனால் அது சரியாக ஒர்க் அவுட் ஆகியிருப்பது மச்சக்காரரான ஜெய்க்கு மட்டும் தான். ஆம்.. ‘ராஜாராணி’ படத்தில் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்த ஜெய்க்கு, இப்போது அதிர்ஷ்ட தேவதை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புடன் தேடிவந்து கதவை தட்டியுள்ளது. நம்புங்கள்.. இயக்குனர் திரு இயக்கும் புதிய படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா..

த்ரிஷாவின் வருங்கால கணவரான வருண்மணியன் தான் இன்னும் இரண்டு தயாரிப்பாளர்களுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார். இசைக்கு தமன், ஒளிப்பதிவுக்கு ரிச்சர்டு எம்.நாதன், எடிட்டிங்கிற்கு ரூபன் என ஹைடெக் டெக்னீசியன்கள் இந்தப்படத்தில் பணியாற்றுகின்றனர். மார்ச்சில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

Comments are closed.