விவசாயிகளுக்கு போராட்டத்திற்கு நடிகர் சங்கம் ஆதரவு !

223

Nadigar-Sangam SUPPORT

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ம் தேதி செவ்வாய் கிழமையன்று அனைத்து கட்சிகள் சார்பாக நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

“பல வருடங்களாக இயற்கையாலும், காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றபட்டு வரும் தமிழக விவசாயிகள் பலரும், அரசிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், தற்கொலை முடிவை நாடி வருவது வேதனை அளிக்கிறது.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் கடமையாகும். அதை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.