இரண்டாவது முறையாக ‘டாக்டர்’ ஆனார் நா.முத்துக்குமார்..!

202

 

வார்த்தைகளில் வசியமருந்தை குழைத்து இளைஞர்களை மயக்குவதில் கவிப்பேரரசுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்றால் அது நா.முத்துக்குமார் தான். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடரும் இவரது இசையுலகப்பயணம் பத்தாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது.

தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா   தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர், முனைவர் திரு.செல்வின்குமார் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

நா.முத்துக்குமார் வாங்கும் இரண்டாவது டாக்டர் பட்டம் இது. 2006 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைகழகத்தில் தமிழ் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரரான நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது மிகவும் பொருத்தமானதே.

Comments are closed.