டிச-18 முதல் களைகட்டுகிறது ‘சென்னையில் திருவையாறு – சீசன் 10’

198

 

பிரபலமான லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர், “சென்னையில் திருவையாறு என்ற பெயரில், மார்கழி மாத இசை நிகழ்ச்சியை, கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்த வருடம் இதன் 10ஆம் ஆண்டு துவக்க விழா, சென்னை காமராஜர் அரங்கத்தில் வரும் டிசம்பர்-18ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்க இருக்கிறது.

துவக்க நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள்  சிறப்பு விருந்தினராக, பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளார். டிச-18ல் தொடங்கும் இந்த உற்சவம் கிறிஸ்துமஸ் தினம்(டிச-25) வரை தொடர இருக்கிறது. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சியையே இன்று ஹோட்டல் சவேராவில் பல இசைக்கலைஞர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்தினர் லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர்.

Comments are closed.