இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’..!

167

onnps 1

விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஆறுமுக குமார் என்கிற புதியவர் இயக்கி வருகிறார். நவம்பர் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்பொழுதிலிருந்தே இப்படத்தை போட்டி போட்டு வாங்க ஆட்கள் தயாராக இருக்கிறார்களாம். ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில் விஜய்சேதுபதியின் அசுர வளர்ச்சியும் கவுதம் கார்த்திக்கின் வெற்றி பயணம் தொடங்கியுள்ளதும் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Comments are closed.