ஜெகஜோதியாக நடந்து முடிந்திருக்கிறது ‘ஓம் சாந்தி ஓசானா’ மலையாள படத்தின் இசைவெளியீட்டு விழா. இது போல அதிசயமாக எப்போதாவது தான் நிகழும். அப்படித்தான் நேரம் பட ஜோடியான நிவின் பாலி, நஸ்ரியா இரண்டுபேரும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் நிகழ்வையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
2011ல் ‘யூவ்’ என்ற மலையாள ஹிப்-ஹாப் ஆல்பத்துக்காக ஜோடிசேர்ந்த நிவின், நஸ்ரியா இருவருக்கும் அந்த ஆல்பத்தை பார்த்துத்தான் ‘நேரம்’ படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ‘நேரம்’ படத்தில் இந்த ஜோடிக்கு கிடைத்த வரவேற்புதான் இந்த ‘ஓம் சாந்தி ஓசானா’.
இந்தப்படத்தை ஜூட் ஆண்டனி என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் கதை நஸ்ரியாவை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறதாம். இந்த விஷயம் தெரிந்தாலும் கதை பிடித்துப்போனதால் அதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ஹீரோவாக நடிக்க சம்மதித்து விட்டார் நிவின்.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த விழாவில் நஸ்ரியாவின் காதலரும் வருங்கால கணவருமான பஹத் பாஸில் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட நஸ்ரியாவின் தற்போதைய இன்னொரு சினிமா ஜோடியான துல்கர் சல்மான் அதை பெற்றுக்கொண்டார். பஹத் பாஸில் பக்கத்தில் நிற்கும் நஸ்ரியாவின் முகத்தில்தான் எவ்வளவு சந்தோசம்..?!