நடிகர்கள் : நந்தகுமார், பிரத்யங்கிரா ரோஸ், செளந்தர்யா வரதா, ஆடுகளம் நரேன், சீனி பாட்டி, ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார், கிரேன் மனோகர், நாகராஜ் சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தனபாலன்
இசை : ராஜயோகி
ஒளிப்பதிவு : வேல் முருகன்
இயக்கம் : வேல்விஸ்வா
தயாரிப்பு : எஸ்.பாஸ்கர்
இணை தயாரிப்பு : ஹேமா மூவிஸ் இண்டர்நேஷ்னல் என்.என். மணிபாலன்
காலம் மாறினாலும் பெண்களின் அவலநிலையும், அவர்கள் மீதான அடக்குமுறையும் இன்னும் முழுமையாக மாறவில்லை, என்பதை விளையாட்டு பின்னணியில் சொல்லியிருக்கும் ‘எட்டும் வரை எட்டு’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
அதிக வளர்ச்சி பெறாத வறண்ட மண் நிறைந்த பொட்டல் கிராமம்.அந்த கருவேலக்காட்டில் தான் பூமணி பிறந்தாள்.தாயின் முகம் பார்க்காமலே பிறந்தவள். ஓடுவதில் அளவு கடந்த ஆர்வம். உலக அரங்கில் ஏறி நின்று தன்னை அடையாளப்படுத்த ஆசைபடுகிறாள். ஓடுவதை லட்சியமாக எடுத்து கொள்கிறாள்.அதற்காகவே ஓடுகிறாள்.தந்தை தங்க வேலு பழைய மனிதர் என்பதால் பூமணியின் லட்சியத்திற்குதடையாக இருக்கிறார். அந்த தடைகளை மீறிபூமணியின் லட்சியம்நிறை வேறியதா.
இதற்கிடையில்ஓரு கொலை குற்றத்திலும் மாட்டிக்கொள்கிறாள் பூமணி.அவளின் லட்சியம் நிறைவேறியதா..? கொலை குற்றத்திலிருந்து எப்படி தப்பிக்கிறாள் என்பதே கதை.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரத்யங்கிரா ரோஸ், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து பாராட்டு பெறுகிறார். தனது லட்சியத்திற்கு வரும் தடைகளை சாமர்த்தியமாக தகர்த்து ஒவ்வொரு படியாக முன்னேற்றம் அடைபவர், கொலை குற்றவாளியாகி தடுமாறும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தியிருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் நந்தகுமார் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ நரேன், தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார், கிரேன் மனோகர், நாகராஜ சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தன்பாலன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நிறைவாக நடித்திருப்பதோடு, அவ்வபோது சிரிக்கவும் வைக்கிறார்கள்.
ராஜயோகி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. வேல் முருகனின் ஒளிப்பதிவில் வறண்ட மண் நிறைந்த கிராமம் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளை எளிமையான லொக்கேஷன்களில் படமாக்கினாலும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் வேல்விஸ்வா, பெண்களை கெளரவிக்கும் ஒரு கதையை, எந்த அதிகமான மசாலத்தனம் இன்றி மிக நேர்மையாக கையாண்டுள்ளார். என்னதான் அறிவியல் முனேற்றம் ஏற்பட்டாலும், பெண்கள் பல துறைகளில் சாதித்தாலும், இன்னும் பல கிராமங்களில் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை இருக்கத்தான் செய்கிறது என்பதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, பெண்களின் முன்னேற்றத்திற்கு அவர்களது குடும்பத்தாரே தடையாக இருக்கும் அவலங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து கமர்ஷியல் விசயங்களையும் அளவாக கையாண்டு, அதை சமூகத்திற்கு தேவையான கருப்பொருளோடு சேர்த்து சொல்லப்பட்டிருக்கும் ‘எட்டும் வரை எட்டு’ நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.