தேவையில்லாமல் எதையாவது பேசி, வம்பை விலைகொடுத்து வாங்குவதில் சர்ச்சை நாயகன் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை மிஞ்ச ஆளில்லை. சமீபத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்த துல்கர் சல்மானின் நடிப்பை புகழ்கிறேன் என அவரைத் தந்தை மம்முட்டியை அவமரியாதையாக விமர்சித்துள்ளார்.
“விருது வழங்கும் குழுவில் இருப்பவர்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருந்தால் மம்முட்டிக்கு கொடுத்த விருதுகளை திரும்ப வாங்கி அவரது மகனுக்கு கொடுக்க வேண்டும்.. துல்கர் சல்மானுடன் கம்பேர் பண்ணும்போது மம்முட்டி வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் தான்.. தனது மகனை பார்த்தாவது மம்முட்டி எப்படி இயல்பாக நடிப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.. இத்தனை வருடங்களாக அவர் செய்யாததை, வந்த சில வருடங்களிலேயே அவரது மகன் துல்கர் சல்மான் செய்துகாட்டி விட்டார்” என மகனை புகழ்ந்தும் தந்தையை இகழ்ந்தும் வார்த்தையை விட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “இன்னும் பத்து பிறவிகள் எடுத்தாலும் எனது தந்தையின் நடிப்பில் மில்லியனில் ஒரு சதவீதம் கூட என்னால் பண்ணமுடியாது” என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ராம்கோபால் வர்மாவின் முகத்தில் கரியை பூசியுள்ளார் துல்கர் சல்மான்..
Comments are closed.