கார்த்தியின் நண்பர்கள் உருவாக்கிய ‘அருவி’..!

168

aruvi 1

கார்த்தி நடிக்கும் பிரம்மாண்ட படைப்பான ‘காஷ்மோரா’வை தொடர்ந்து டிரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் ‘அருவி’ என்கிற படத்தை தயாரித்துள்ளனர். இந்தப்படத்தை அருண்பிரபு புருஷோத்தமன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்தப்படம் டெல்லியில் நடைபெற்ற Habitat Film Festivalலில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சீனாவின் ஷாங்காய் உலகத் திரைப்படவிழாவில் நேற்று இரவு 8 மணி அளவில் திரையிடப்பட்டது. அதேசமயம் இப்படத்தின் கதை இப்போது வரை வெளியில் தெரியாமல் சஸ்பன்சாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்துக்கு பிந்து மாலினி & தேவ்தாந்த் பரத்வாஜ் இணைந்து இசையமைக்க, பாடல்களை குட்டி ரேவதி எழுதியுள்ளார் விரைவில் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவுள்ளது

Comments are closed.