சுசீந்திரன் டைரக்ஷனில் பாண்டியநாடு படத்தில் நடித்து வருகிறார் விஷால். சமீபத்தில் இந்தப்படத்திற்காக விஷால், விக்ராந்த், சூரி மூன்று பேரும் ஆடிப்பாடிய ‘ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிங்கிள் ட்ராக்கை, தான் படித்த லயோலா கல்லூரியில் லட்சுமி மேனன், இயக்குனர் சுசீந்திரன், டி.இமான் ஆகியோருடன் சேர்ந்து கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வைத்து வெளியிட்டார் விஷால்.
இந்தப்பாடலில் காதல் தோல்வி மற்றும் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட சந்தோசம் என இருவேறு உணர்ச்சிகளை பிரதிபலித்திருக்கும் விஷால் “உண்மையிலே இந்தப்பாடல் எனக்கு சவாலாக இருந்தது” என்கிறார். இந்தப்படத்தை வாங்கியுள்ள வேந்தர் மூவிஸ் நிறுவனம் இதனை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது.