சுசீந்திரனுக்கும் ஏஞ்சலினாவுக்கும் என்ன சம்பந்தம்…?

192

anjalina

சுசீந்திரனின் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வரும் தீபாவளி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மாநகரம் புகழ் சந்தீப் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை முடித்தவுடனேயே தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்து நடத்தி வந்தார் சுசீந்திரன்.

இந்த படத்திலும் முக்கிய பாத்திரங்களில் புதுமுகங்களே நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட இந்தப்படத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை சூட்டப்போவதாக சுசீந்திரன் அறிவித்திருந்தார்.

ஏற்கனவே தனது ‘அறம் செய்து பழகு’ படத்தின் டைட்டில் நெஞ்சில் துணிவிருந்தால் என மாற்றப்பட்டபோது தன்னுடைய தந்தையைக் கொண்டே புதிய பெயரை அறிவித்தார் சுசீந்திரன். தற்போது இந்த புதிய படத்திற்கு. அவர் ஏற்கனவே சொன்னபடி பெண்ணின் பெயரான ‘ஏஞ்சலினா’ என்று பெயர் சூட்டியுள்ளார். இந்தப்படத்தின் டைட்டில் போஸ்டரையும் சுசீந்திரனின் தாய், தந்தை இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

Comments are closed.