“விஜய்சேதுபதிதான் என்னை தேடிவந்த தர்மதுரை” ; சீனுராமசாமி நெகிழ்ச்சி..!

204

Director Seenu Ramasamy says about dharmadurai

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் தான் ‘தர்மதுரை’ இந்தப்படத்தில் கதாநாயகிகளாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர்.. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ஸ்டுடியோ 9 சுரேஷ் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. இதில் இயக்குனர் பாலா உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.. இதை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இதில் பேசிய சீனுராமசாமி தன்னை தேடிவந்த தர்மதுரை விஜய்சேதுபதிதான் என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

“இடம் பொருள் ஏவல்’ படத்தை முடித்தபின் அந்தப்படம் ரிலீஸாக தாமதம் ஆனது. அடுத்ததாக பட வாய்ப்பும் அமையவில்லை.. அந்த நேரத்தில் வந்ததுதான் இந்த தேமதுரை படம்.. ஒருவேளை இந்தப்படம் கிடைக்காவிட்டாலும் கூட, இதற்குள்ளாக ஏதாவது படம் கிடைத்திருக்கலாம்.. என்றாலும்கூட அது சின்ன படமாகவே இருந்திருக்கும்..

ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில், பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளுடன் ஒரு பெரிய படம் கிடைத்து நிச்சயம் விஜய்சேதுபதியினால் தான். அவர்தான் என்னை தேடிவந்த தர்மதுரை” என தனது சிஷ்யனை பற்றி புகழ்ந்து கூறினார் சீனுராமசாமி..

Comments are closed.