மணிகண்டனுடன் சேர்ந்து இன்னொரு லட்டு தின்ன தயாராகும் சந்தானம்..!

221

Actor Santhanam Once Again Join With Director Manikandan

பாக்யராஜின் இன்றுபோய் நாளைவா பாணியில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற படத்தை சந்தானம்-பவர்ஸ்டார் காம்பினேசனில் கலாட்டாவான காமெடிப்படமாக எடுத்து வெற்றி கண்டவர் இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன். தற்போது மூன்று வருட இடைவெளி விட்டு மீண்டும் சந்தானம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மணிகண்டன்.

பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள், நிமிர்ந்து நில் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வாசன் விஷூவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது. கதாநாயகி, மற்ற நட்சத்திரங்கள், படத்தலைப்பு ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது

Comments are closed.