“பார்த்திபன் நினைத்தார்.. கமல் செய்தார்…!

183

Dir Parthiban Inaugurated Click Art Museum

இதுவும் கமல் நேரடியாக சம்பந்தப்படாத ஒரு விஷயம் தான். தமிழ்சினிமாவை பொறுத்தவரை தொழில்நுட்ப விஷயங்களை முதல் ஆளாக பீல்டுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல் தான் முதல் ஆளாக இருந்து வருகிறார்.. அதேபோல குள்ள ‘அப்பு’, ‘அவ்வை சண்முகி’ போன்று வித்தியாசமான கதாபாத்திர அறிமுக விஷயங்களிலும் அவர்தான் முன்னோடியாக இருக்கிறார். இது யாராலும் மறுக்க முடியாத விஷயம்..

அதேபோல புதுமைகளுக்கு சொந்தக்காரர் என பெயர்பெற்ற இயக்குனர் கம் நடிகர் தான் பார்த்திபன்.. ஆனால் இவர் அடுத்து செய்ய நினைத்த ஒன்றை முந்திக்கொண்டு கமல் செய்துவிட்டார் என ஒரு விழாவில் தெரியப்படுத்தி உள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபலமான ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கலை வண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமான க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தை ஆரம்பித்துள்ளார். இதை துவக்கி வைக்க வந்த பார்த்திபன் தான் மேலே நாம் குறிப்பிட்ட விஷயத்தை சொன்னார். அது என்ன என்பதை அவர் வாயாலேயே கேட்கலாம்.

“நாம் ஏதாவது புதுமையாக செய்ய முயன்றால் அதை முந்திக் கொண்டு செய்ய இங்கே கமல்ஹாசன், ஏ.பி.ஸ்ரீதர் போன்ற பலபேர் இருக்கிறார்கள் நானும் ரவுடிதான் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை தனியாக எடுத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தசாவதாரத்தின் பல்ராம் நாயுடுவை தனியாகப் பிரித்து ஒரு படமாக்கி கமல் அந்த வேலையை ஆரம்பித்து விட்டார். குத்துவிளக்கு ஏற்றுவதை நெருப்பு இல்லாமல் ஓவியமாக எதாவது ஒரு நிகழ்ச்சியில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் இங்கே ஸ்ரீதர் செய்து விட்டார். இந்த ட்ரிக் ஆர்ட் மியூசியம் உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ” என்றார் பார்த்திபன்

அப்படியே இந்த மியூசியத்தின் ஸ்பெஷல் பற்றியும் சொல்லிவிடுவோம்.. இங்கே மொத்தம் 24 ஓவியங்கள். இங்கு எந்த விதிகளும் கிடையாது, உண்மையில் செய்யக்கூடாதவை என்று எதுவுமில்லை, வழக்கமாக இதுபோன்ற பொது உடங்களில் எதையெல்லாம் அனுமதிக்க மாட்டார்களோ அதற்கெல்லாம் “க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தில்” இடமுண்டு. ஒரு மனிதன் தனக்குள் ஒளிந்திருக்கும் நடிகரை, ஒளிப்பதிவாளரை அல்லது இயக்குனரை வெளியே கொண்டு வர இந்தக் கலைக்கூடம் உதவும்.

அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததும், அங்கிருக்கும் உதவியாளர் ஒருவர் அருங்காட்சியகம் பற்றியும் அங்குள்ள ஓவியங்கள் குறித்தும் அங்கு நீங்கள் எப்படிச் சுற்றித் திரியலாம், எங்கு நின்று எப்படி புகைப்படம் எடுக்கலாம் என்றெல்லாம் விளக்குகிறார் உள்ளே, முக்கியமான இடங்களில் விளக்கக் காணொளிப் படங்களும் திரையிடப்பட்டிருக்கும், அது உங்களை ஒரு ‘கலைப் போருக்குத்’ தயாராக்கும். .

இந்த தந்திரக் கலை ஓவியக் காட்சியகத்தை துவங்கி வைத்த இயக்குனர். பார்த்திபன் பல்வேறு ஓவியங்களுடன் இணைந்து தோற்றம் காட்டினார். அதில் ஒன்றுதான் மேலே உள்ள புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது.

Comments are closed.