தெலுங்கில் சூப்பர்ஹிட்டாகிய ‘மரியாத ராமண்ணா’ தற்போது மலையாளத்தில் திலீப், நிக்கி கல்ராணி நடிக்க ‘இவன் மரியாதராமன்’ என்கிற பெயரில் ரீமேக்காகி, விரைவில் ரிலீசாகவும் உள்ளது.. 2௦1௦ல் தெலுங்கில் வெளியாகிய இதன் ஒரிஜினலை தொடர்ந்து 2௦11ல் கன்னடத்திலும், பெங்காலியிலும் இந்தப்படம் வெளியானது. 2௦12ள் அக்சய் குமார் நடிக்க இந்தியிலும் ‘சன் ஆப் சர்தார்’ என்கிற பெயரில் வெளியானது.
கடந்த வருடம் தமிழிலும் அந்தப்படம் சந்தானம் நடிக்க ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என வெற்றி பெற்றது தெரியும் தானே.? இந்தப்படத்தின் பிரதான கதாபாத்திரமாக சைக்கிள் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.இப்போது கடைசியாக திலீப்பின் கைவசம் வந்துள்ள அந்த சைக்கிள், இனி வேறு மொழி ரீமேக்கிற்கு சாத்தியம் இல்லாததால் ஒருவழியாக இனி அவருக்குத்தான் சொந்தம் என்று ஆகிவிட்டது.
பொதுவாக, மலையாள திரையுலகை பொறுத்த வரையில் மற்ற மொழிகளில் இருந்து வெற்றிபெற்ற ஒரு படத்தின் கதையை வாங்கி ரீமேக் பண்ணுவது என்பது அசாதாரணமான விஷயம்.. காரணம் கதையை உற்பத்தி பண்ணுவதற்கென்றே பெருங்கூட்டம் அங்கே இருக்கிறது. அதையும் தாண்டி இந்தப்படத்தை ரீமேக் செய்கிறார்கள் என்றால் மலையாள படங்களின் அடிநாதமாக விளங்கும் காமெடி லைனை அந்தப்படம் மண்மணம் மாறாமல் பிரதிபலிக்கிறது என்பதால் தான்.
Comments are closed.