நடிகர்கள் : அஷ்வின் குமார், குரு லட்சுமணன், பாடினி குமார், ஸ்ரீத்து கிருஷ்ணன், ப்ரீத்தி ஷர்மா, செளந்தர்யா, ரவிவர்மா, பிர்லா போஸ்
இசை : அஷ்வத்
ஒளிப்பதிவு : என்.எஸ்.சதீஷ் குமார்
படத்தொகுப்பு : சாம் ஆர்டிஎக்ஸ்
இயக்கம் : ஜே.ஜெஸ்வினி
தயாரிப்பு : தேவன் சார்லஸ், பி.பிரவீன்குமார், சரண்யா வீரமணி
தூள்பேட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர் எப்படியாவது அந்த காவல் நிலையத்தில் இருந்து பணியிட மாற்றம் பெற்று வேறு காவல் நிலையத்திற்கு சென்று விட வேண்டும் என்று விரும்புகிறார். காரணம், அத்தகைய பரபரப்புமிக்கது அப்பகுதி. இதற்கிடையே, அந்த காவல் நிலையத்தில் தான் பொறுப்பு வேண்டும் என்று விருப்பப்பட்டு அந்த காவல் நிலையத்தின் உதவி ஆணையராக வருகிறார் நாயகன் அஷ்வின் குமார். அவர் வரும் சமயம், ஒரே நாளில் அப்பகுதியில் ஒரு ரவுடி, ஒரு இளம் பெண் மற்றும் முகம் தெரியாத ஒரு நபர் என மூன்று பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
முன்னதாக இப்படி அப்பகுதியில் மூன்று பேரின் தலை கிடைக்கப் போகிறது என்று அந்த காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பாடினி குமாருக்கு தோன்றுகிறது. அவருக்கு இப்படி ஒரு எண்ணம் வந்த சில மணி நேரங்களில் அப்படியே நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கொலை செய்யப்பட்ட மூன்று பேர் யார் ? எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் ?, இப்படி நடக்கும் என்று பாடினி குமாருக்கு தோன்றக் காரணம் என்ன ?, பலர் பணியாற்ற பயப்படும் காவல் நிலையத்தில் தான் பொறுப்பு வேண்டும் என்று அஷ்வின் குமார் விரும்பியது ஏன் ? இப்படி பல கேள்விகளுக்கான பதில் தான் தொடரின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அஷ்வின் குமார் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, இதுவரை பார்த்த அஷ்வின் குமார் இல்லை, என்பதை தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வெளிக்காட்டியிருக்கிறார்.
நாயகியாக காவலர் வேடத்தில் நடித்திருக்கும் பாடினி குமார், ஆரம்பக் காட்சியிலேயே அதிர்ச்சிகரமான தன் எண்ணத்தை வெளிக்காட்டு, பார்வையாளர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் குரு லக்ஷ்மண், செரிது கிருஷ்ணா, ப்ரீத்தி சர்மா, செளந்தர்யா, ஷியமந்தா கிரண் என்று தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதிஷ் குமாரின் கேமரா, தொடரின் துவக்கம் முதலே பார்வையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தும்படி காட்சிகளை கடத்திச் செல்கிறது.
இசையமைப்பாளர் அஷ்வத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அடுத்தடுத்த பாகங்களில் வரவிருக்கும் ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் முன்கூட்டியே தெரியப்படுத்தும் விதத்தில் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஷாம் ஆர்.டி.எஸ், கிரைம் திரில்லர் ஜானர் தொடரை சரியான முறையில் கையாண்டு, ஒவ்வொரு எப்பிசோட் முடியும் போதும், அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்பார்ப்பு ஏற்படும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஜே.ஜெஸ்வினி, முதல் மூன்று பாகங்களில் முக்கிய கதாபாத்திரங்களின் பின்னணியில் இருக்கும் மர்மங்களோடு, கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் பின்னணி என்னவாக இருக்கும், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுவதால், அடுத்தடுத்த எப்பிசோட்களை பார்க்க பேரார்வம் ஏற்பட்டு விடுகிறது.
அஷ்வின் குமார், பாடினி குமார் ஆகிய கதாபாத்திரங்களின் பின்னணியில் இருக்கும் மர்மங்கள் மற்றும் ஒரே நாளில் கொலை செய்யப்படும் மூன்று பேர்களின் ரகசியங்கள் என, தொடர் முழுவதும் பல திருப்பங்களோடும், பல அதிர்ச்சிகரமான ஆச்சரியங்களோடு பயணிப்பதால், முழு தொடரும் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.