தனஞ்செயன் எழுதிய புத்தகத்திற்கு தேசிய விருது..!

216

 

 

சந்திக்கும் அனைவரிடமும் புன்னகை முகத்துடன் பழகக்கூடிய தனஞ்செயன், யுடிவி நிறுவனம் தயாரிக்கும் தமிழ்ப்படங்களின் முக்கிய முடிவுகள் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். இப்போது சினிமாவை பற்றி தான் எழுதிய, ‘PRIDE OF TAMIL CINEMA’ என்ற நூல், சினிமாவை பற்றிய சிறந்த புத்தகத்திற்கான தேசிய விருது பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

தனஞ்செயன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்தப்புத்தகத்தில் 1931-ஆம் ஆண்டிலிருந்து துவங்கி 2013ஆம் ஆண்டு வரையிலான தமிழ் சினிமா குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியுள்ளது. அதுமட்டுமல்ல.. உலக சினிமா பிரபலங்களும் நம் தமிழ் சினிமா குறித்த தகவல்களையும் அறிந்துகொள்ளும் விதமாக ஆங்கில மொழியில், சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் இந்த புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது

சினிமா சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா குறித்து அறிய விரும்புகின்ற, தமிழ் சினிமா குறித்த ஆராய்ச்சிகள் நடத்துகின்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் இப்புத்தகம் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என புத்தகம் வெளியானபோதே பரவலாக பேசப்பட்டது. இப்போது இந்த புத்தகத்திற்கு கிடைத்துள்ள தேசிய விருது அதை மெய்ப்பித்துள்ளது.

தேசியவிருது பெரும் அளவுக்கு தகுதியுடைய, பயனுள்ள இந்த நூலை எழுதிய தனஞ்செயனுக்கு நமது behind frames தனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.