‘திலகர்’ துருவா நடிக்கும் ‘தேவதாஸ் பிரதர்ஸ்’..!

202

‘தேவதாஸ் பிரதர்ஸ்’ என்கிற வித்தியாசமான படத்தை இயக்கும் அறிமுக இயக்குனரான ஜானகி ராமனை ஐஷ்வர்யா தனுஷ், சற்குணம் , வேல்ராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக சினிமா கற்றவர் என்று சொல்வதை விட தனுஷ் போகும் பாதையில், கூடவே செல்பவர் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும். காரணம் தனுஷ் நடித்த ‘3,’ ‘நய்யாண்டி’,’ வேலையில்லா பட்டதாரி’ என மூன்று படங்களிலும் பணியாற்றியவர் தான் இந்த ஜானகிராமன்.

சம்பந்தமில்லாத நான்கு பேர் ஒருவரை ஒருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அது தெரிந்த பிறகு அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதே ‘தேவதாஸ் பிரதர்ஸ்’ படத்தின் கதை.. அவர்கள் யார் ? எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே திரைக்கதை. குறிப்பாக எந்த ஹீரோயிசமும் இல்லாதபடி கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

இந்த நால்வராக ‘திலகர்’ துருவா, பாலசரவணன், ‘மெட்ராஸ்’ ஜானி, ‘ராஜதந்திரம்’ அஜய் பிரசாத் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இது முழுக்க முழுக்க சென்னையிலேயே நடக்கும் கதை. ‘போடா போடி’ படத்துக்கு இசையமைத்த தரண் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Comments are closed.