எழில் இயக்கத்தில் விமல், பிந்துமாதவி நடித்துள்ள தேசிங்குராஜா கடந்தவாரம் வெளியானது. இரண்டு கிராமங்களுக்கு இடையே இருக்கும் பகையும் அங்கே ஏற்படும் காதலும்தான் கதைக்களம். நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படம் நன்றாக ஓடுவதை தொடர்ந்து இந்த வாரத்திலிருந்து தினசரி 35 காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.