‘ஆதிபகவன்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி நடித்துவரும் படம் தான் ‘நிமிர்ந்து நில்’. ‘போராளி’ படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கும் இந்தப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அமலா பால், மேக்னா ராஜ் இருவரும் நடிக்கிறார்கள். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. ‘உன்னை நீ சரிசெய்து கொள், உலகம் தானாக சரியாகி விடும்’ என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது ‘நிமிர்ந்து நில்’. ஆதிபகவன் படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி அந்தப்படத்தைப் போலவே இதிலும் ஒரு வேடத்தில் வில்லனாக நடிக்கிறார். குறிப்பாக 48 வயதான மனிதனாக நடிக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு.
‘நிமிர்ந்து நில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 11ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இதன் தெலுங்குப்பதிப்பானா ‘ஜண்டாபாய் கபிராஜூ’வில் நானி ஹீரோவாக நடிக்கிறார்.