‘ஆரம்பம்’ படத்தில் தனது ரசிகர்கள் எதிர்பார்த்ததை சரியாக தந்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார் அஜீத். ஆனால் தற்போது நடித்துவரும் வீரம் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது என்கிறார்கள் படக்குழுவினர். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
அஜீத் தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு நடித்திருப்பதோடு, கிராமிய களத்தை கொண்ட கதைக்கருவும் அவரது ரசிகர்களுக்கு ஒரு சரியான பொங்கல் விருந்தாக இருக்கும் என்பதற்கு உத்திரவாதமும் தருகிறார்கள்.
கடந்த 2011ஆம் வருடம் ‘சிறுத்தை’ படம் மூலம் பொங்கல் விருந்து படைத்த இயக்குனர் சிவா மூன்று வருடங்கள் கழித்து, வரும் 2014 பொங்கலுக்கும் ‘வீரம்’ மூலம் விருந்து படைப்பார் என நம்புவோம்.