“சிக்கவேண்டியவங்களுக்கு சிக்கவேண்டியவங்க சிக்கிட்டாங்க…”

84

என்னடா ஒரே சிக்கலா இருக்குன்னு பார்க்குறீங்களா..? காதலிப்பவர்கள் அதை திருமணம் வரைக்கும் கொண்டுபோனால் தான் அந்த காதல் வெற்றி அடைந்ததாக நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனால் காதலிக்கும் அந்த பெண்ணின் மனது நம்மிடம் வந்த மறு வினாடியே நாம் ஜெயித்துவிட்டோம் என்பதுதான் உண்மை. இதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் ‘சிக்கு சிக்கிக்கிச்சு’.

இந்தப்படத்தின் இயக்குனர் என்.ராஜேஷ் குமார் கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றவர். பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி வரிசையில் மற்றொரு இயக்குனராக களமிறங்கியுள்ளார் ராஜேஷ் குமார்.

சென்னையில் ஒருநாள் படத்தில் பிரசன்னா, சேரனுடன் காரில் பயணப்படுபவராக நடித்த மிதுன் தான் இந்தப்படத்தின் ஹீரோ. நாகராஜ சோழன் படத்தில் நடித்த மிருதுளா ஹீரோயினாக நடித்துள்ளார். ஆதித்யா டிவியில் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ புகழ் ஆதவன் காமெடிக்களத்தை கவனிக்கிறார். என்.சி.ஆர் கிரியேசன்ஸ் சார்பில் என்.ராஜேஷ் குமாரே தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் கதை முழுக்க முழுக்க ஒரு ரயிலில் நடக்கிறது. இதற்காக ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லும் அந்த ரயிலில் என்ன காட்சிகள் அரங்கேறுகிறது என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் படம் பார்ப்பவர்களுக்கு இரண்டு மணி நேரம் ஒரு ரயிலில் பயணம் செய்த உணர்வு ஏற்படுமாம்.

இன்னொரு முக்கிய தகவல் இதில் விஜய டி. ராஜேந்தர் ஒரு பாட்டு பாடியுள்ளார். படத்துக்கு இசையமைத்துள்ளார் விஜய் பெஞ்சமின். விரைவில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.