சென்னை-28 பார்ட்-2வுக்கு கிடைத்த முதல் விருது..!

217

chennai 28 2 award

ஒரு படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என சொல்லி மண்ணை கவ்வியவர்கள் பல பேர்.. ஆனால் முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகத்தையும் அதேவிதமாக ரசிகர்களை ரசிக்க வைப்பதில் தான் அந்தப்படத்தின் வெற்றியே அடங்கி இருக்கிறது.. அந்தவகையில் சென்னை-28 முதல் பாகத்திலும் சரி கடந்த வருடம் வெளியான அதன் இரண்டாம் பாகத்திலும் சரி ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ, அதை சரியாக நிறைவேற்றி இருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு..

‘சென்னை-28’ படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தது சவுன்ட் டிசைனிங் என்பதை மறுக்க முடியாது.. அந்தவகையில் நடைபெற்ற IFFA விருது வழங்கும் விழாவில் இந்தப்படத்தின் சவுண்ட் டிசைனராக பணியாற்றிய உதயகுமாருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.. இது இந்தப்படத்திற்கு கிடைத்த முதல் விருதாகும்.

உதயகுமாரை பொறுத்தவரை இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 300 படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார். ஃபோர் பிரேம்ஸ்’ உதயகுமார் என்றால் திரையுலக வட்டாரத்தில் ரொம்பவே பிரபலம். இவர்தான் விசாரணை படத்தின் ஒலிப்பதிவுக்காக சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டப்பட்டவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Comments are closed.