நிவாரண பணியில் ஈடுபட்ட 1200 காவல்துறையினரின் குடும்பங்களுக்கு விஷால் உதவி..!

218

vishal
சமீபத்தில் சென்னையை வாட்டி வதைத்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும், வெள்ள நிவாரண பொருட்களையும் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாகவும், நடிகர் சங்கத்துடனும் இணைந்து வழங்கிய விஷால், அந்த களத்திலும் இறங்கி நிவாரண பணிகளை கவனித்தார்..

அந்தசமயத்தில். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க திறமையுடனும் தன் குடும்பதை பாராமலும் இரவு பகலாய் பணிபுரிந்த காவல் துறை நண்பர்களின் சுமார் 1200 குடும்பங்களுக்கு, உதவும் விதத்தில் தற்போது நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார் விஷால்.

இதனை பெற்றுக்கொண்ட சென்னை காவல் துறை சார்பில் விஷாலுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் விஷால் சினிமாவில் மட்டுமல்ல, ரியல் லைப்பிலும் ஹீரோ தான் என பாராட்டும் தெரிவித்துள்ளார்கள்.

Comments are closed.