50ஆம் நாளை தொட்டது ‘பாண்டியநாடு’

127

நேற்றுத்தான் தீபாவாளி வந்ததுபோல இருக்கிறது. ஆனால் ஐம்பது நாட்கள் மிக வேகமாக ஓடிவிட்டது என்பது ‘பாண்டியநாடு’ 50வது நாள் போஸ்டரைப் பார்த்ததும் தான் தெரிகிறது. ஒரு கச்சிதமான ஆக்‌ஷன் படம் எப்படி இருக்கவேண்டும் என்பதை புதிய கோணத்தில் அணுகியிருந்தார் இயக்குனர் சுசீந்திரன்.

அதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் அற்புதமாக ஒத்துழைத்தார் விஷால். கூடவே லட்சுமிமேனன், சூரி, விக்ராந்த், பாரதிராஜா என வகையான கூட்டணி சேர, இதோ 50 நாட்களை வெற்றிகரமாக தொட்டிருக்கிறது பாண்டிய நாடு.

தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த விஷாலுக்கு ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதேபோல ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கிடைத்த வெற்றியை இந்தப்படத்தின் மூலம் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார் சுசீந்திரன்.

Leave A Reply

Your email address will not be published.