
‘தமிழ்படம்’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்த அந்த ‘புரட்சிப்பெண்’ திஷா பாண்டேவை அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டீர்கள்.. தமிழில் ‘கீரிப்புள்ள’, ‘எம்.எம்.எஸ்’ படங்களுக்கு பிறகு சரியான வாய்ப்பு இல்லாததால் கன்னடத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை குறிவைத்தார். அந்தவகையில் ‘ஸ்ரீமதி ஜெயலலிதா’ என்ற படத்தில் நடித்துவருகிறார் திஷா. இது மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘மாயமோகினி’ படத்தின் ரீமேக் தான்.
இந்நிலையில் ‘பாம்பே மிட்டாய்’ என்ற இன்னொரு கன்னடப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு திஷாவை தேடிவந்துள்ளது. சந்திரமோகன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஊர் ஊராக சுற்றி இயற்கையை, பழமை வாய்ந்த புராதான சின்னங்களை புகைப்படம் எடுக்கும் பெண்ணாக திஷா பாண்டே நடிக்கிறார்.
“இந்தப்படத்தை நான் ஒத்துக்கொண்டதே ஊர்சுற்றுவதற்காகத்தான்.. எனக்கு இயல்பாகவே புராதான இடங்களை பார்வையிடுவது, இயற்கையை புகைப்படம் எடுப்பது, பயணம் செய்வது என இந்த மூன்றும் பிடிக்கும்.. இந்தப்படத்தில் அதுவே என் கேரக்டராக அமைந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்” என்கிறார் இந்த ‘ஜெய்ப்பூர்’ மிட்டாய்.
236608 929863Hi there for your private broad critique, then once more particularly passionate the recent Zune, and moreover intend this specific, not to mention the beneficial feedbacks other sorts of everybody has posted, will determine if is it doesnt answer you are looking for. 343081