‘போகன்’ கதை ரகசியம் உடைந்தது எப்படி..?

200

bogan-4

கோடம்பாக்கத்தை பொறுத்தவரை அவ்வப்போது கதை திருட்டு சர்ச்சைகள் எழுவது வாடிக்கை தான்.. லேட்டஸ்டாக அந்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் படம் ‘போகன்’. ரோமியோ ஜூலியட் கூட்டணியான இயக்குனர் லட்சுமண், ஜெயம் ரவி, ஹன்ஷிகா இவர்களுடன் அரவிந்தசாமியையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு உருவாகிவரும் படம் தான் ‘போகன்’.. கடந்த சில நாட்களாக ஆண்டனி தாமஸ் என்பவர் போகன் படத்தின் கதை தன்னுடையது என்றும், லட்சுமண் அதை திருடி ‘போகன்’ படமாக இயக்குகிறார் என்றும் சினிமா கதாசிரியர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்..

சங்கத்தின் பதவியில் இருந்த இயக்குனர்கள் இந்த பஞ்சாயத்தை விசாரித்தனர். இதில் ‘போகன்’ படத்தின் கதையும், புகார் கொடுத்த ஆண்டனி தாமஸின் கதையும் பல காட்சிகளும் ஒரேபோல் இருப்பது முதலில் தெரியவந்தது.. இதனால் ஆண்டனி தாமஸிடம் கேட்டபோது சில நிபந்தனைகளுடன், 75 லட்ச ரூபாய் பணம் தரவேண்டும் என நிபந்தனைகளை அடுக்கியுள்ளார்..

ஆனால் போகன் இயக்குனரை அழைத்து விசாரித்தபோது, அவர் கொரிய படத்தின் டிவிடி ஒன்றை கொடுத்து அவர்களை பார்க்க சொல்லியிருக்கிறார்.. இந்த ரெண்டு பேருமே அந்தப்படத்தில் இருந்துதான் கதையை தழுவியிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது.. அதனால்தான் தனது கதை என்று இதை இயக்குனர் லட்சுமண் கதாசிரியர்கள் சங்கத்தில் பதிவு செய்யவே இல்லை..

ஆனால் ஆண்டனி தாமஸ் எந்த தைரியத்தில் இது தனது சொந்தக்கதை என பதிவு செய்து, இன்னொரு இயக்குனர் மீது புகாரும் கொடுத்தார் என்று தெரியவில்லை.. இதை தொடர்ந்து ஆண்டனி தாமஸை கதாசிரியர் சங்கத்தினர் எச்சரித்து அனுபியுள்ளனர்.

Comments are closed.