தயாரிப்பாளரின் சுமையை குறைக்க சம்பளத்தில் ரூ.5 லட்சம் விட்டுக்கொடுத்த பிந்து மாதவி..!

246

 

ஐங்கரன் நிறுவனத்தில் இருந்து விலகி நடிகர் அருண்பாண்டியன் தனியாக தயாரித்துள்ள படம் தான் ‘சவாலே சமாளி’. ‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ள இந்தப்படத்தில் அசோக் செல்வன், பிந்துமாதவி ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அருண்பாண்டியன் இன்று தயாரிப்பாளர்களுக்கு கூடுதலாகிப்போன சுமைகளை பற்றியும் பட ரிலீசின்போது பல முன்னணி நடிகர்கள் உதவிக்கு வருவது இல்லை என்பது பற்றியும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அதேசமயம் இந்தப்படத்தை உலகமெங்கிலும் ரிலீஸ் செய்யும் முயற்சியில் தான் இறங்கியிருப்பதை அறிந்து படத்தின் நாயகன் அசோக் செல்வனும், நாயகி பிந்துமாதவியும் தங்களது சம்பளத்தில் இருந்து ஐந்து லட்ச ரூபாயை விட்டுத்தர முன்வந்தார்களாம். ஆனால் அவர்கள் இருவரின் பெருந்தன்மையை பாராட்டி அவர்களுக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்துவிட்டாராம் அருண் பாண்டியன்.

Comments are closed.