
ஆர்யாவின் கேரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. அவர் படத்தில் இரண்டுமுறை நடித்த அதிர்ஷ்டசாலி தான் ஆர்யா. அதனால் ஆர்யா தயாரித்துள்ள, அவரது தம்பி சத்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘அமர காவியம்’ இசைவெளியீட்டு விழாவுக்கு பாலா வராமல் இருப்பாரா என்ன?
விழாவில் பேசிய பாலா, “சத்யாவை நான்தான் அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்குள் ஜீவாஷங்கர் மூலமாக நல்ல கதை தேடிவந்ததால் ஆர்யா முந்திக்கிட்டார். ஆர்யா சிறந்த நடிகன். அதையும் தாண்டி சிறந்த பிசினஸ்மேன். அவன் தம்பியும் தான். ரெண்டுபேருமே விவரமானவனுங்கதான். இன்னைக்கு என்.எஸ்.சில் இருக்குற அத்தனை தியேட்டர் லிஸ்ட்டும் இவங்க ரெண்டுபேருக்கும் அத்துப்படி. அதனால இவங்கள பத்தி யாரும் கவலைப்படவேண்டாம்” என ஆர்யாவுக்கும் அவரது தம்பிக்கும் சேர்த்தே புகழாரம் சூட்டினார்.
Comments are closed.