
பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் ரிலீஸ் தேதி.. அவ்வளவு ஏன், டீசர், ட்ரெய்லர், ஆடியோ ரிலீஸ், பர்ஸ்ட் லுக் தேதி வெளியானாலே அவர்களின் ரசிகர்களுக்கு அது சாதாரண நாளாக இருந்தாலும் பண்டிகை நாள் போலத்தான். அப்படி எதை ரிலீஸ் செய்தாலும் சினிமாக்காரர்கள் நல்ல நாள் பார்த்து தான் ரிலீஸ் செய்வார்கள் என்பது வேறு விஷயம்.
ஆனால் தற்போது விஜய் நடித்துவரும் பைரவா’ படத்தின் அறிவிப்புகளும் நிகழ்வுகளும் ஒவ்வொரு பண்டிகை நாளில் நடைபெறுவதை, கவனித்து பார்த்தால் தெரியும். படத்தின் டைட்டில்-பர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்றும், டீசர் தீபாவளி அன்றும் வெளியானது..
அடுத்ததாக கிறிஸ்துமஸ் தினத்தன்று படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பட ரிலீஸ் வழக்கம்போல விஜய்க்கு சென்டிமென்ட்டாக வெற்றி தருகின்ற பொங்கல் பண்டிகை அன்று இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆக, ‘பைரவா’ நிகழ்வுகள் ஒவ்வொன்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா, இல்லை ஏதேச்சையானதா என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.
Comments are closed.