விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், பரதனின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில், விஜய் நடித்துவரும் படம் ‘பைரவா’. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப்படத்தில், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பிராமையா, சரத் லோகித்ஸ்வா, சதீஷ், அபர்ணா வினோத் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ‘பூசணிக்காய்’ உடைப்புடன் இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் இளையதளபதி விஜய், தயாரிப்பாளர் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.. ‘பைரவா’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் ஸ்ரீ கிரீன் புரொடக்க்ஷன்ஸ் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
முதல் முறையாக இசையமைப்பாளர் விஜய் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இருக்கிறார். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரவுள்ளது.
Attachments area
Comments are closed.