அட்லிக்கு அக்காவாக மாறிய சமந்தா..!

207

Atli Is My Brother Told By Samantha

கத்தி படத்தில் விஜய்க்கு வெற்றிகரமான ஜோடியானதை தொடர்ந்து தற்போது இரண்டாம் முறையாக விஜய்யுடன் ஜோடிசேர்ந்து இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார் சமந்தா.. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்தை அட்லி தயாரித்து வருகிறார்.. அட்லியைப்பற்றி குறிப்பிடும்போது தம்பி என்றே சொல்கிறார் சமந்தா.

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய சமந்தா, ரசிகர்களில் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதிலளித்தார்.. அதில் தனக்கு இதுவரை 884 பேர் லவ் அப்ளிகேசன் போட்டுள்ளதாக கூறியுள்ளார்., அட்லியை பற்றி சொல்லுங்கள் என்றால் அவர் என் தம்பி என சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல மகேஷ்பாபு, பவன் கல்யாண் பட வாய்ப்பு தேடிவந்தால் என்ன செய்வீர்கள் என்றால், “இரண்டையும் ஏற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை தூக்கிப்போட்டுவிட்டு அங்கே ஓடிவிடுவேன்” என்றும் கூறியுள்ளார். பிழைக்கத்தெரிந்தவர் தான் சமந்தா.

Comments are closed.