இந்த இயக்குனர்களுக்கும் முன்னணி ஹீரோக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள். படத்தை அறிவிக்கும்போதே தயவுசெய்து அதன் டைட்டிலையும் அறிவித்துவிட்டால் உங்களுக்கு புண்ணியமாக போய்விடும்.. இல்லையென்றால் ஆளாளுக்கு இதுதான் டைட்டில் என்று ரசிகர்களை சுத்தலில் விட ஆரம்பித்து விடுகிறார்கள்..
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கும் இதுதான் நடந்துகொண்டிருந்தது. முதலில் ‘வாள்’ என டைட்டில் வைத்ததாக தகவல் வெளியானது.. அதற்கு அடுத்ததாக அது ‘தீரன்’ என்ற வதந்தியாக மாறியது.
இப்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்திற்கு ‘கத்தி’ என பெயர் வைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். முந்தைய படம் ‘துப்பாக்கி’.. இப்போது ‘கத்தி’.. விஜய் படத்திற்கு ஏற்றமாதிரி சரியான தலைப்புகளாகத்தான் பிடிக்கிறார் முருகதாஸ்.
Comments are closed.