“நான் ஷங்கரும் இல்லை.. நீ ரகுமானும் இல்லை” – அதிபர் இயக்குனர் அதிரடி..!

226


இன்றைக்கும் டிவி சேனல்களில் நாள் தவறாது ஒளிபரப்பாகும் ‘வாம்மா மின்னல்’ என்கிற வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட எவர்கிரீன் காமெடியை ‘மாயி’ படம் மூலம் தந்த இயக்குனர் சூர்யபிரகாஷ், தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘அதிபர்’..

இதுவரை நெகடிவான ஹீரோத்தனம் கலந்த கேர்க்டரகளாகவே நடித்துவந்த ஜீவன் இந்தப்படத்தில் அதற்கு முற்றிலும் மாறாக நண்பனின் துரோகத்தால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பாடம் கற்பிப்பவராக நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் கதையே படத்தயாரிப்பாளரான சிவகுமாரை அவரது உயிர் நண்பன் ஏமாற்றிய உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தான் எடுக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி, நந்தா முக்கிய வேடத்தில் நடிக்க, ரஞ்சித், ரிச்சர்ட் ஆகியோர் வில்லனாக நடித்துள்ளார்கள். காமெடியில் பட்டையை கிளப்ப இருக்கிறார்களாம் தம்பி ராமையாவும் கோவை சரளாவும்.. இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸை எப்.எம்.மில் சிம்பிளாக முடித்துவிட்டு, மாலையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்தப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் விக்ரம் சிங்கா, இதுவரை அனைத்து இசையமைப்பாளர்களின் கிட்டத்தட்ட 300 படங்களில் கீபோர்டு பிளேயராக வேலைபார்த்த அனுபவம் கொண்டவர்.. இவர் பேசும்போது, “டைரக்டர் சூர்யபிரகாஷ் என்னிடம் இசையமைக்கும்படி பொறுப்பை ஒப்படைத்தபோது, பாடல் வெளியான உடனே ஹிட்டாவதற்கு நான் ஷங்கரும் இல்லை.. நீ ரகுமானும் இல்லை. அதனால் கேட்ட உடனே ரசிகர்களை அசத்துகிற மாதிரி பாடல் இருக்கவேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்கேற்ற மாதிரி பாடல்களும் ஹிட்டாகும் வகையில் போட்டுள்ளேன்” என்று கூறினார்.

Comments are closed.